பிரதமர் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை ; 10 ஆயிரம் இந்தியர்களை வேவு பார்க்கும் சீனா!


P Vaidyanathan Iyer , Jay Mazoomdaar , Kaunain Sheriff M

China watching: President, PM, key Opposition leaders, Cabinet, CMs, Chief Justice of India :  யுத்தம் மற்றும் சீன தேசத்தின் பெரும் புத்துணர்ச்சி போன்ற திட்டங்களுக்காக மிகப்பெரிய தரவுகளை பயன்படுத்துகின்றோம் என்று கூறும் ஷென்சனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், சீன கம்யூனிச கட்சிக்கும், சீன அரசுக்கும் அதிக அளவில் தொடர்பில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான 10 ஆயிரம் நபர்களை வேவு பார்த்து வருகின்றது. உலகளாவிய தரவுகளில் இருக்கும் வெளிநாட்டு இலக்குகளில் இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இடம் பெற்றுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.  ஜென்ஹுவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் (Zhenhua Data Information Technology Co. Limited) இந்தியாவில் இருக்கும் இலக்குகளை அடையாளம் கண்டு கண்காணித்து வருகிறது.

இந்த கட்டுரையை விரிவாக ஆங்கிலத்தில் படிக்க

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள். முதல்வர்களில் மம்தா பானர்ஜி, அஷோக் கெலாத், மற்றும் அம்ரிந்தர் சிங், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதே போன்று மத்திய கேபினெட் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முப்படை தளபதி பிபின் ராவத், முன்னாள் ராணுவ, விமானப்படை, கப்பற்படை தளபதிகள் 15 பேர்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் போப்டே, நீதிபதி ஏம்.எம். கான்வில்கர், லோக்பால் நீதிபதி பி.சி. கோஷ், மத்திய கணக்கு தணிக்கையாளர் ஜி.சி. முர்மு; தொழில் முனைவோர்கள் நிபுன் மெஹ்ரா(பாரத் பே செயலியின் நிறுவனர்), அஜய் டெஹ்ரான், ரத்தன் டாட்டா மற்றும் கௌதம் அதானி ஆகியோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

அரசியல் தளத்தில் இருக்கும் முக்கியமான நபர்கள் மட்டுமின்றி பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும் பலரையும் அவர்கள் வேவு பார்த்து வருகின்றனர். முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள்ள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், மதத்தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் நிதி மோசடி, ஊழல், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்துபவர்கள், காட்டில் இருக்கும் பொருட்களை கடத்துபவர்கள், தங்கம் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றவாளிகலின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்திய சீன எல்லையில் சீனா தொடர்ந்து லடாக் மற்றும் அண்டை நாடுகளில் மேலும் முன்னேறி செல்லும் இந்த நேரத்தில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் ஷென்ஹூவா நிறுவனம் சீனாவின் உளவுத்துறை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையுடன் பணியாற்றி வருகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பெரிய தரவுக் கருவிகளைப் பயன்படுத்தி, ஷென்ஹுவாவின் நடவடிக்கைகளில் இருந்து மெட்டா தரவை ஆராய்ந்தது, இது இந்திய நிறுவனங்களை பிரமாண்டமான பதிவுக் கோப்புகளிலிருந்து பிரித்தெடுப்பதற்காக Overseas Key Information Database (ஓ.கே.ஐ.டி.பி) என்று அழைக்கப்பட்டது. இந்த தரவுத்தளம், அட்வான்ஸ்ட் லாங்குவேஜினை பயன்படுத்துகிறது. மேலும் இலக்கு மற்றும் வகைப்பாடு கருவிகளைப் பயன்படுத்துகிறது. வெளிப்படையான குறிப்புகள் ஏதும் இல்லாமல் நூற்றுக்கணக்கான உள்ளீடுகளை உள்ளடக்கியது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, மற்றும் அமீரகம் நாடுகளின் உள்ளீடுகளும் உள்ளது. இந்த தரவுகள் அனைத்தும் ஷென்சன் நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் பெறப்பட்டது. ஆபத்து மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, தகவல்கள் அளித்தவரின் பெயர் மேற்கோள்காட்டப்படவில்லை.

ஷென்சனில் பணியாற்றிய, தற்போது வியட்நாமில் இருக்கும் பேராசிரியர், கிறிஸ்டோஃபர் பல்டிங் மூலம் பணியாற்றியவர் இந்த தரவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆஸ்திரேலியன் ஃபினான்சியல் ர்வியூ, இத்தாலின் ஐல் ஃபோக்லியோ, மற்றும் லண்டனில் உள்ள டெய்லி டெலிகிராஃப் போன்ற ஊடகங்களுடன் தரவுகளை பகிர்ந்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: