புகைப்படங்கள் எரிப்பது மட்டும் அபசகுனம் இல்லையா சுரேஷ் தாத்தா? – பிக் பாஸ் விமர்சனம்

புகைப்படங்கள் எரிப்பது மட்டும் அபசகுனம் இல்லையா சுரேஷ் தாத்தா? – பிக் பாஸ் விமர்சனம்


Bigg Boss 4 Tamil Review Day 22: ‘இரண்டு மணிநேர ஷோவில்தான் கன்டென்ட் கொடுக்க மாட்டிங்குறீங்க, அட்லீஸ்ட் நான்கு மணிநேரம் ஷோவாக போட்டால் கன்டென்ட் சிக்குமா’ என்று பிக் பாஸ் நினைத்திருப்பார் போல, விஜயதசமியை முன்னிட்டு இருபத்தி இரண்டாம் நாள் நான்கு மணிநேர எபிசோட். போட்டி, விளையாட்டு என நாள் முழுவதும் அவர்கள் பிசியாக இருந்தாலும், நமக்கு நாளிருதியில் கன்டென்ட் கிடைத்துவிட்டது. (ஹப்பாடா!)

மண்மணம் மணக்கும் ‘மதுர குலுங்கக் குலுங்க..’ பாடலோடு விடிந்த நாள், சட்டென நாமினேஷன் டாஸ்க்கிற்கு கூட்டிச்சென்றது. வித்தியாசமாக நாமினேஷன் இருக்கவேண்டும் என்று நினைத்த பிக் பாஸ், நாமினேட் செய்யப்போகும் போட்டியாளர்களின் புகைப்படங்களை எரிக்கவைத்தார். புகைப்படங்களை எரிப்பதும் ‘அபசகுனம்’ லிஸ்ட்டில் வரும்தானே! அப்போது மட்டும் சுரேஷ்ஜி ஆனந்தமாகச் செய்தாரே! பிக் பாஸ் என்றால் ஒரு நியாயம் அனிதாவிற்கு ஒரு நியாயமாஜி!

இம்முறை, ‘போட்டியாளர்களை’ யாரும் நாமினேட் செய்யவில்லை, தங்களின் விருப்புவெறுப்புகளை வைத்தே நாமிநேட் செய்துகொள்கின்றனர். அதனால் சுவாரசியம் என்பது சிறிதும் இல்லை. சரி, நாமளாவது ஏதாவது கன்டென்ட் சேர்ப்போம் என்று, சோம், வேல்முருகன், ஆஜீத், நிஷா, ரியோ, அனிதா, சுரேஷ், ரம்யா, ரமேஷ், சனம் மற்றும் பாலா என வீட்டில் இருப்பவர்களில் பாதிக்கும் அதிகமானவர்களை இம்முறை நாமினேட் லிஸ்ட்டில் வைத்துவிட்டார் பிபி.

Bigg Boss Tamil 4 Promo Bigg Boss 4 Tamil Vijayadasami Celebrations

குறைந்த வாக்குகளைப் பெற்று இம்முறை சனம் ஷெட்டி வெளியேறி, வேல்முருகனைக் காப்பாற்றப்போகிறார் என்ற பாலாவின் நக்கல் வேற லெவல். ஆனால், அதற்குள் சனம் ஷெட்டிக்காக தான் மனதார வேண்டிக்கொள்வதாக வேல் கூறியதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. விசித்திர மனிதர்கள்தான் நாம் எல்லோரும். (ஹய்யோ! ஹய்யோ!)

அடுத்ததாக அனிதா தொகுத்து வழங்க, நகரத்தின் கொண்டாட்டம், கிராமத்தின் கொண்டாட்டம் என இரண்டு அணிகளாகப் பிரித்து, சமையல், ஆடல், பாடல் போன்ற போட்டிகளை நடத்தி அசத்தினார்கள். கொலு பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டுவது, ஒரே பொருள்களை வைத்து வித்தியாச இனிப்பு வகைகளைச் செய்வது, 7 ஸ்டோன்ஸ் விளையாட்டு, நடனம், பட்டிமன்றம், நாடகம் என ஒவ்வொரு டாஸ்க்கிலும் அனைத்து போட்டியார்களும் தங்களின்  பங்களிப்பைக் கொடுத்தனர்.

ஆனால், ஒவ்வொரு டாஸ்க்கிலும் கொளுத்திப்போட்டுக்கொண்டே இருந்தார் சுரேஷ். ‘தான் செய்த கேசரியைவிட வெற்றிபெற்ற சனம் குழு செய்த பொங்கல் அவ்வளவு ருசியாகவா இருந்தது!’ என்ற மைண்ட் வாய்ஸோடு பொங்கலை ருசித்த சுரேஷ், அதில் மண் இருக்கிறது முடி இருக்கிறது என்று தம்பட்டம் அடித்தார். ஆனால், இதற்கிடையில் பாலா சனம் கடலையைக் கவனிக்கவும் மறக்கவில்லை பிக் பாஸ். ஆனால், கேபியை பாலாவிடமிருந்து பிரிச்சுடீங்களே பாஸ். பிரித்தது மட்டுமல்லாமல் ஷிவானியோட பாலாவை கோர்த்துவிட்டுடீங்களே. இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ!

Bigg Boss 4 Tamil Vijay tv Suresh Aari Ramya Pandian Kamal hasan Sanam Bala Review Day 18 Bigg Boss 4 Tamil vijay Tv Suresh Chakravarthy

தங்களின் குடும்பத்தினருக்குப் பூஜை வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டு, பிக் பாஸ் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்களையும் வீட்டிலிருக்கும் ஆண்கள் தெரிவித்துக்கொண்டனர். அப்போது ஒருவழியாக வேல்முருகன் தனக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருக்கிறது என்பதை வெளிப்படையாகப் போட்டுடைத்தார். ஆனால், இப்போதுதான் வேல்முருகன் தான் சொல்ல வந்ததை மழுப்பாமல், பூசி மூடாமல் தெளிவாகச் சொன்னார். பாராட்டுகள்!

அடுத்து, குலவையோடு பூஜை ஆரம்பமானது. அப்போதுதான், ‘சுமங்கலி வாங்க’ என்றுகூறி சுரேஷ் அழைக்க, பளிச்சென்று அனிதாவிற்கு பல்பெரிந்தது. ஆரி, ரம்யா பாண்டியனின் அசத்தலான மேடைப் பேச்சுக்குப் பிறகு அனிதா பேசியவர், சுரேஷ் சொன்ன வார்த்தையைக் குறிப்பிட்டும் தன் திருமணத்தில் நடந்த ஓர் சம்பவத்தையும் இணைத்தும் மூடநம்பிக்கை பற்றி எடுத்துரைத்தார். அனிதா கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும், தன்னை ‘தவறாகச் சித்தரிக்கப்பார்க்கிறாளோ’ என்ற குழப்பம் சுரேஷ் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அப்படிப்பார்த்தால், உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களை எரிப்பது மட்டும் சரியா? அப்போது ஏன் சுரேஷ் அதனை அபசகுனம் எனக் கூறவில்லை என்ற கேள்வி எழாமலில்லை.

Bigg Boss Tamil 4 review, Bigg Boss Archana Bigg Boss 4 Tamil Archana

பிக் பாஸ் போன்று சோம் பேச, பிபி வீட்டிற்குள் நடப்பவற்றை நகைச்சுவையாக நடித்துக்காட்டினார் சனம். இறுதியாக சோம் பீட் பாக்சிங் செய்ய, ஆஜீத் சென்னை பற்றிய பாடலை பாடி அவர்களுடைய டாஸ்க்கை நிறைவு செய்தனர். அடுத்ததாக, நிஷா, வேல் வில்லுப்பாட்டு ஸ்டைலில் பாட, ‘நாரதர் கலகம்’ நாடகத்தை ரியோ குழு மிக அருமையாக வெளிப்படுத்தியது. அதில் அர்ச்சனாவின் நடிப்பு அருமை.

என்னதான் மகிழ்ச்சியாக நிறைவடைந்திருந்தாலும், சுரேஷின் மனது சாந்தமடையவில்லை. ‘என்னைப் பார்த்து எப்படிச் சொல்லலாம்?’ என்று அனிதா மேடையில் கூறியதை நிஷா, சம்யுக்தா, அர்ச்சனா என எல்லோரிடமும் பற்றவைத்துக்கொண்டிருந்தார் சுரேஷ். ரியோ முதல் நிஷா வரை அனைவரும் ‘நீ பேசியது தவறு’ என்று அனிதாவிடம் சுட்டிக்காட்டினார்கள். (அவ்வளவு பெரிய தவறெதுவும் இல்லையே இதில்!) ஆனால், ஓர் தொகுப்பாளராக அப்படிப் பேசுவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று அர்ச்சனா சொன்ன பாயின்ட் நூறு சதவிகிதம் உண்மை.

Bigg Boss 4 Tamil Vijay tv Suresh Aari Sanam Bala Review Day 18 Bigg Boss 4 Tamil Vijay Tv

முன்பு ஒருமுறை ‘உதாரணத்திற்காக’ ரியோ கூறிய சொற்களை எடுத்துப் பேசி சுரேஷ் நன்கு வாங்கிக்கட்டிக்கொண்ட அதே சம்பவம்தான் இப்போதும் நடந்திருக்கிறது. அனிதா மன்னிப்பு கேட்க வரும்போதும், பிரச்சினையைத் தீர்க்காமல் சுரேஷ் ஓடிப்போவது சரியான செயலே அல்ல. நிச்சயம் இது தொடர்ந்தால் மனக்கசப்பு அதிகரித்துக்கொண்டேதான் போகும். வீட்டில் பெரியவராக இருந்துகொண்டு இப்படி தவறான உதாரணமாக இருப்பது ஏற்றுக்கொள்ளும்  வகையில் இல்லை. இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய ரியோ எடுத்துக்கொண்ட முயற்சி குறிப்பிடத்தக்கது.

கலகலப்பாக ஆரம்பித்த நாள், கலவரத்தோடு நிறைவடைந்தது. வீட்டில் இருப்பவர்களில் 11 பேர் நாமினேட் ஆகியிருக்கிறார்கள். அதில் வீட்டைவிட்டு வெளியேறப்போவதற்கான அதிகப்படியான வாய்ப்பு வேல், அனிதா, சுரேஷுக்குதான் இருக்கிறது. ஆனால், இப்போதுவரை கன்டென்ட் கொடுப்பவர்களும் இவர்கள் மட்டுமே. உங்களுடைய சாய்ஸ் யார்?

“ copy rights NavaIndia”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: