
Poondu Kulambu in Tamil, Chettinad Poondu Kuzhambu: பூண்டு பிடிக்காதவர்களுக்கும் பூண்டு குழம்பு பிடிக்கும். இதனை அடிக்கடி சாப்பிட்டு வருவதால், உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறுபட்ட நோய்களையும், ஆரோக்கிய குறைபாடுகளையும் தடுத்து, அவற்றை போக்க உதவுகிறது. உடலுக்குத் தேவையான மருத்துவ குணங்களை கொண்டுள்ள பூண்டை மூலப் பொருளாக வைத்து, டேஸ்டியான செட்டிநாடு பூண்டு குழம்பு எப்படி செய்வதென்று இங்கே குறிப்பிடுகிறோம்.
நடிப்பில் மட்டுமல்ல சொந்த பிஸினஸ்ஸிலும் வெற்றி தான்!
தேவையானப் பொருட்கள்
பூண்டு – 30 பல்
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 1
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
புளி – நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
தாளிக்க
கடுகு – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 /2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை
* புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை.
* தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஏ.ஆர்.ரகுமான்- ஏ.ஆர்.அமீன் இணைந்த பாடல்: சுஷாந்த்-க்கு அஞ்சலி
* கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
* தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
* அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
* சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு ரெடி.
குறிப்பு: பூண்டை வதக்கும்போது அதனுடன் சுண்டைக்காய் வற்றல் அல்லது மனத்தக்காளி வற்றல் சேர்த்தால் வத்தல் குழம்பு ரெடி!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center