
புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் அடிப்படை சந்தேகங்களை களைய, ஐயங்களைப் போக்க மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் முன்வந்துள்ளார்.
ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இது குறித்து வெளியிட்ட ட்வீட் செய்தியில்,” புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். கல்விக் கொள்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக ஒரு நாள் தனியாக ஒதுக்கப்படும்”என்றார்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஆர்வமுள்ளவர்கள் தங்கள் கேள்விகளை #NEPTransformingIndia என்ற ஹேஷ்டேக் மூலம் கல்வி அமைச்சகம் அல்லது கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
Dear students, teachers, and parents!
Do you have any question related to #NEP2020?
Share them with me using #NEPTransformingIndia.
I and the ministry will be dedicating 1 full day to address your concerns.
Looking forward to your queries! pic.twitter.com/9h1xk7TGf1— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) August 18, 2020
பள்ளிக் கல்வி முறை 10+2 என்ற கட்டமைப்பிலிருந்து 5+3+3+4 என்ற கட்டமைப்புக்கு மாறுகிறது. 3 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளி கல்வி முறைக்கு இது கொண்டு வரும். புதிய கல்வி முறை 12 ஆண்டுகள் பள்ளிக் கல்வியையும், மூன்று ஆண்டுகள் பள்ளிக்கு முந்தைய கல்வியையும் கொண்டிருக்கும்.
குழந்தைகளுக்கு முடிந்த அளவுக்கு, 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி அளிக்கிறது.
3,5,8-ஆம் வகுப்புகளுக்கான பள்ளித் தேர்வுகளைப் பள்ளிகளிலேயே நடத்த புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
ஒரே வழியில் உயர்கல்வி பெறுவது என்ற கட்டுப்பாடு இல்லாமல், பல முறை சேர்வது மற்றும் வெளியேறுவது (multiple exit and entry), தரநிலை வங்கி (Academic Bank of Credit)
போன்ற அம்சங்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center