மாதவிடாய் நாட்களில் பெண்களுடன் ஆண்கள் இப்படி இருந்தால்..? அந்த மூன்று நாட்கள் கேவலம் அல்ல…! ஆபாசம் என நினைப்பவர்கள் பகிர வேண்டாம்..!


மாதவிடாய். இது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? இதற்கும் பெண்களுக்கும் என்ன சம்மந்தம்? இதை பேசினாலும் பெண்ணியவாதி என்று பட்டம் கொடுத்து படிக்காமல் சென்று விடாதீர்கள்..இது பெண்களது தவறு கிடையாது. இயற்கை கொடுத்தது .நாம் தேடிப் பெற்றுக் கொண்டது கிடையாது? இதனை ஏன் தவறான கண்ணோட்டம் கொண்டு பார்க்க வேண்டும். !

அன்றைய காலத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் உழைத்து களைத்தார்கள், எங்களை போல் அல்ல காடுகள் வெட்டி, கட்டை பிடுங்கி, வயல் வேலை, விறகு வெட்டுவது, கல் உடைப்பது போன்ற வேலைகள் செய்தார்கள், அவர்களுக்கு கிடைக்கும் மூன்று நாள் ஓய்வு

என்பது இந்த மாதவிடாய் நாட்களே. மாதவிடாய் நாட்களில் உதிரப் போக்கு இருக்கும் உடல் சோர்ந்து போய் இருக்கும், தலை சுற்றல் மயக்கம் வரும் அதனால் பெண்களுக்கு கடின வேலைகள் கஷ்டம் என்பதால் அந்த மூன்று நாட்கள் பெண்களை ஓய்வு கொடுத்தார்கள், அதுவே பின்பு தீட்டானது.

இல்லாவிடில் இது தீட்டும் அல்ல கேவலமும் அல்ல. பெண்கள் மது அருந்தினால் திட்டுங்கள், விபச்சாரம் செய்தால் திட்டுங்கள், தவறான செயல்களில் ஈடு பட்டால் திட்டுங்கள்…அது எமது கலாச்சாத்திற்கு ஏற்றதல்ல ஆனால் மாதவிடாய் காலத்தில் அணியும் pads வாங்கினால் ஏன் திட்ட வேண்டும்.

விஸ்பர் அணிந்து பெண்களால் எதுவும் செய்யலாம் என சில விளம்பரங்களை நம்பி எம் வலியை புரிந்துகொள்ளாது நீங்கள் நடந்துகொள்ளும் விதம் கொடூரமானது.இன்று பெண்கள் தினம் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி இருப்பீர்கள்..அதில் ஒருவர் எனக்கு மாதவிடாய் இன்று என கூறினால் அவரை எந்த மாதிரியான கண்ணோட்டத்தில் பார்ப்பீர்கள்.. ?

உங்களுக்கு பெண்களை ரசிக்க தெரிகிறது, ஆடைகளை பற்றி கருத்து சொல்ல முடிகிறது ஆனால் மாதவிடாய் காலத்தில் அவள் படும் அவஸ்தை தெரியுமா? பெண்களுக்கு வலி கூட பெரிதாக இருக்காது நீங்கள் கொடுக்கும் தொல்லைகள் தான் வலி கொடுக்கும்.! Pads என்றதும் முகம் சுழிக்கும் நீங்கள் திருமணமாகி இருந்தால் pads இன்றி ஒரு நாள் மாதவிடாய் நாளில் உங்கள் மனைவியின் அருகில் இருந்து பாருங்கள்.

அப்போது புரியும்.. என் பாட்டி இது பற்றி ஒரு முறை கூறினார். அந்த மூன்று நாட்கள் பற்றி அறியாத தாத்தா அருகில் இருக்க வேண்டும் என கேட்டாராம். முதலில் மறுத்தாலும் தனியாக இருந்ததால் அனுமதித்தாராம். அப்போது பழைய துணிகளையே pads க்கு பதில் பயன்படுத்துவார்களாம். அப்படி பயன்படுத்திய துணியை கழுவி வைத்து பயன்படுத்துவார்களாம்.

ஒரு முறை தாத்தா வீட்டில் இல்லாததால் பாட்டி துணியை கழுவிகொண்டிருந்தாராம். ஏதேச்சையாக வந்த தாத்தா அதனை கண்டு மயங்கி தரையில் விழுந்து விட்டாராம். உன் உடலில் இருந்து இவ்வளவு இரத்தம் வெளியேறுகிறதா என கேட்டவர் மரணிக்கும் வரை பாட்டியில் அளவு கடந்த அன்பு வைத்திருந்தாராம். மாதவிடாய் நாட்களில் ஒரு நாள் கூட பாட்டியை விட்டு வெளியே செல்லவில்லையாம். இதனால் தான் சொல்கிறோம் ஒரே ஒரு முறை அருகில் இருந்து பாருங்கள்..!Post Views:
4www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: