மாஸ்க் அபாயம்: அலர்ஜியை தவிர்க்க என்ன வழி?

மாஸ்க் அபாயம்: அலர்ஜியை தவிர்க்க என்ன வழி?


Allergens in Masks Tamil News : மாஸ்க் அணிவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ஓர் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை. அதேநேரம் அதன் தொடர்புடைய ஏராளமான சிக்கல்களும் இருக்கின்றன. மாஸ்க் அணிவதனால் சருமம் சேதமடையும், ஒவ்வாமையை ஏற்படுத்தும் அல்லது ஏற்கெனவே சருமப் பிரச்சனைகள் உள்ளவர்களின் சருமத்தை மேலும் மோசமடைய வைக்கும். இப்போது, சில மாஸ்க்குகளில் தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமை பொருட்கள் உள்ளன என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த வாரம், அமெரிக்க ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் நோயெதிர்ப்பு கல்லூரியின் (ACAAI) வருடாந்திர அறிவியல் கூட்டத்தில், சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டாக்டர் யஷு தமிஜா, பல்வேறு விதமான சரும நிலைமைகளைக் கொண்ட ஓர் நோயாளியின் வழக்கை முன்வைத்தார். ஏப்ரல் 2020 வரை கட்டுப்பாட்டில் இருந்த அவருடைய சருமம், மாஸ்க் அணியத் தொடங்கிய பிறகு புதிய அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. பாதிக்கப்பட்டவரின் முகத்தில், மாஸ்க்கின் எலாஸ்டிக் பகுதிகளுடன் தொடர்பு கொண்ட இடங்களில் தடிப்புகள் தோன்றியுள்ளன. எனவே, எலாஸ்டிக் அல்லது ரப்பர் பாகங்கள் இல்லாத மாஸ்க்குகளை மக்கள் அணிய வேண்டும் என்று தமீஜா பரிந்துரைக்கிறார்.

வழக்கு ஆய்வு

டாக்டர் தமீஜா தலைமையிலான ஆய்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள நோயாளியின் வயது 60. கறுப்பினத்தைச் சேர்ந்தவரான இவர் அரிக்கும் தோலழற்சி, contact dermatitis மற்றும் க்ரோனிக் நாசி ஒவ்வாமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர். “ஏப்ரல் 2020 வரை, அவருடைய தோல் நிலைகள் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால், மாஸ்க் அணிந்ததால், ஆங்காங்கே முகத்தில் மாறுபட்ட அறிகுறிகள் தோன்றத் தொடங்கின” என டாக்டர் தமீஜா ACAAI-ல் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

ஆரம்ப மருந்துகள் சருமத்தில் ஏற்பட்ட ராஷஸ்களை நீக்கவில்லை. அவர் மாஸ்க் அணிந்தபிறகு, அதன் எலாஸ்டிக் பாகங்கள் பதிந்த இடத்தில் ராஷஸ் தோன்றியதைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பாகங்கள் சரியாகும் வரை ஸ்டீராய்டு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். “நாங்கள் அவரிடம் எலாஸ்டிக் இல்லாத பருத்தி அடிப்படையிலான, சாயமில்லாத மாஸ்க்குகளை பயன்படுத்தச் சொன்னோம். ஒரு வாரம் கழித்து தொடர்ச்சியான தொலைபேசி அழைப்பின் முடிவில், பாதிக்கப்பட்ட இடங்கள் சரியாகி வருவதாகக் கூறினார்” என்று இணை ஆசிரியர் டாக்டர் கிறிஸ்டின் ஷ்மிட்லின் ACAAI அறிக்கையில் கூறினார்.

மாஸ்க் மற்றும் ஒவ்வாமை

தோல் அழற்சியைப் பாதிக்கும் பொதுவான ஒவ்வாமை, மாஸ்க், எலாஸ்டிக் பட்டைகள் மற்றும் மாஸ்க்குகளின் பிற பகுதிகளில் காணப்படுவதாக டாக்டர் தமீஜா மற்றும் டாக்டர் ஷ்மிட்லின் குறிப்பிட்டனர். தற்போது தோல் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் ஒவ்வாமை நிபுணரின் பரிந்துரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

மாஸ்க்கில் உள்ள பொருட்களால் ஏற்படும் அல்லது மோசமடையும் ஒவ்வாமை முன்பு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. லாட்டெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சில எலாஸ்டிக் பொருட்களால் வடிவமைக்கப்பட்ட மாஸ்க்குகளால் ஒவ்வாமை ஏற்படக்கூடும் என மிச்ஷிகன் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது. முகம் கூச்சத்தை உண்டாக்கும் சில மாஸ்க்குகள் மார்க்கெட்டில் உள்ளன. “ஒரு சிறிய துண்டை வெட்டி, உங்கள் காதுக்கு பின்னால் வைத்து, பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் விடுங்கள். எந்தவிதமான கூச்சத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தாவிட்டால், அது உங்கள் முகத்திலும் ஏற்படாது. இது வழக்கமாக வாசனை திரவியங்களில் உள்ள இயற்கை சுவைகளிலிருந்து வருகிறது” என்று பல்கலைக்கழக இணையதளத்தில் பரிந்துரைக்கும் யூட்டா பல்கலைக்கழக ஒவ்வாமை நிபுணர் டக்ளஸ் பவல் கூறுகிறார்.

எலாஸ்டிக் பாகங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தினால், மக்கள் மாஸ்க்கை மாற்றியமைக்க வேண்டும். அவர்கள், பருத்தி அடிப்படையிலான மாஸ்க்குகளை பயன்படுத்தவும் டாக்டர் தமீஜா பரிந்துரைத்தார். “ஒவ்வாமைக்கு நோயெதிர்ப்பு எதிர்வினைகள் உள்ளன. அவை உயிருக்கு ஆபத்தானவை. ஆனால், தோல் அழற்சியுடன் தொடர்பு கொள்ளும்போது, அது அதிகரிக்காது. நாம் விரைவில் ஒவ்வாமையை அடையாளம் காணலாம் மற்றும் சேதப்படுத்தும் முகவரை நிறுத்தலாம். ஆனால், சில வழக்குகள் கடுமையானதாக இருக்கும்” என சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் ஒரு அறிக்கையில், டாக்டர் தமீஜா கூறியுள்ளார்.

“ copy rights NavaIndia”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: