மாஸ்டருக்கு மிரட்டல்… தமிழ்ராக்கர்ஸ் பிடியில் சிக்கிய படங்கள்

மாஸ்டருக்கு மிரட்டல்… தமிழ்ராக்கர்ஸ் பிடியில் சிக்கிய படங்கள்


By: WebDesk
January 12, 2021, 10:15:57 PM

Master Movie vs Tamilrockers: சினிமா உலகை வேட்டை ஆடுவதையே ஒற்றை நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றன பைரசி வெப்சைட்டுகள். அவற்றில் ஒன்று, தமிழ் ராக்கர்ஸ். மாஸ்டருக்கு முன்பு பல படங்களை ரிலீஸான சில மணி நேரங்களில் ஆன்லைனில் வெளியிட்டு வந்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

குறிப்பாக ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு ரசிகர்களைத் தாண்டியும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இவர்களின் படங்களையே அசுர வேகத்தில் லீக் செய்வதில் ஆர்வம் காட்டுகிறது தமிழ் ராக்கர்ஸ். ரஜினிகாந்தின் கபாலி, காலா, தர்பார் என எந்தப் படமும் இதற்கு தப்பவில்லை. அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களையும் தமிழ்ராக்கர்ஸ் வேட்டையாடித் தீர்த்தது.

Master Movie vs Tamilrockers download threat: மாஸ்டருக்கு சவால்

2018 தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சர்க்கார் படத்தை, ரிலீஸான சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது. அதேபோல 2019 தீபாவளிக்கு ரிலீஸான பிகில் படத்தையும் சில மணி நேரம் கூட தாமதிக்காமல் உடனே ரிலீஸ் செய்தது தமிழ் ராக்கர்ஸ்.

இத்தனைக்கும் அப்போது ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாகவில்லை. இந்த கொரோனா காலகட்டத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று போன்ற படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவது தமிழ் ராக்கர்ஸுக்கு இன்னும் சுலபமானது. தற்போது மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாதது, தமிழ் ராக்கர்ஸுக்கு பின்னடைவே!

ஆனால் தமிழ் ராக்கர்ஸின் கடந்த கால சரித்திரம், வெள்ளித் திரையில் வெளியாகும் படங்களையும்கூட உடனுக்குடன் தனது ஆன்லைனில் வெளியிட்டு வந்ததுதான். இதைத் தடுக்க எவ்வளவோ முயற்சித்தும் பலன்கள் கிடைக்கவில்லை. மாஸ்டர் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட உயர் நீதிமன்றம் தடை செய்திருக்கிறது.

ஆனால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் இதைப் பற்றி கவலையே படாமல், ட்விட்டர், டெலகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளிப்படையாக தங்கள் புதிய முகவரிகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களை இழுக்கின்றன. மாஸ்டருக்கும் இது பெரிய சவால்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Actor vijay master movie tamilrockers download threat





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: