
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை ஒருவர் விஜய் மீதுள்ள அன்பால் தன்னை விஜய்யாகவே மாற்றிகொண்டுள்ளார். அந்த ரசிகை விஜய் தோற்றத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா என்பது அனைத்து கலைகளையும் தனக்குள்ளே ஈர்த்துக்கொள்கிற ஒரு பேராற்றல் மிக்க கலை வடிவம். அத்தகைய சினிமா பார்வையாளர்களுக்கு ஒரு கவர்ச்சியான மாய உலகமாக இருக்கிறது. அதனால்தான், சினிமாவில் நடிக்கும் தங்களுக்கு பிடித்த கதாநாயகனுக்காக ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளார்கள். ரசிகர்கள் என்றால் ஆண் ரசிகர்கள் மட்டுமல்ல பெண் ரசிகைகளும்தான் தயாராக இருக்கிறார்கள்.
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருடைய படங்கள் எல்லாம் தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களாக வெற்றி பெற்று வருகின்றன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் படிப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ரீலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில், மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று பரவிய தகவல் வதந்தி என்று கூறிய தயாரிப்பு நிர்வாகம் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று உறுதி செய்தது.
விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய் பற்றியோ அல்லது அவர் நடித்த படம் பற்றியோ எந்த செய்தியாக இருந்தாலும் விஜய் ரசிகர்கள் உலக அளவில் ட்ரெண்டிங் செய்கிறார்கள். அந்த அளவுக்கு விஜய்க்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். விஜய்க்கு ஆண் ரசிகர்கள் அளவுக்கு பெண் ரசிகர்களும் பெரிய அளவில் உள்ளனர்.
Lady vijay pic.twitter.com/ux09U9MgOh
— Siva.k (@sivakubendiran) November 29, 2020
அப்படி, விஜய் ரசிகை ஒருவர் விஜய் மீது உள்ள அன்பால் அவர் தன்னை விஜய்யாகவே மாற்றிக்கொண்டுள்ளார். விஜய் போல, தொப்பி அணிந்து விஜய் போல மீசை தாடி வைத்து விஜய் போலவே மாறியுள்ளார். விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று கூறி அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவில் விஜய் போலவே சிரித்து அசத்துகிறார். தீவிர விஜய் ரசிகையான இந்த பெண் விஜய் போல மேக்அப் செய்துகொண்டு எந்த அளவுக்கு விஜய் மாதிரி இருக்கிறார் என்று பாருங்கள். இந்த விஜய் ரசிகை லேடி விஜய் என்று விஜய்யாக மாறிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Vijays die hard fan girl make up like vijay video goes viral
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center