
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை. இந்தியா ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். இந்தியாவில் கட்சி தொடங்க எல்லோருக்கும் உரிமை உள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
நீலகிரி, திருப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிசாமி இன்று மாலை சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு சென்றார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “கோவை மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1 கி.மீ. நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடக்கின்றன.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படுவதற்கு நடவைக்கை எடுக்கபடும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டால் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.
7 பேர் விடுதலைக்கு குரல் கொடுத்தது அதிமுக அரசு தான். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. வேல் யாத்திரைக்கு சட்டரீதியாக அனுமதி வழங்க முடியாது. பள்ளி திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்கப்படும்.” என்று கூறினார்.
அபோது, முதல்வர் பழனிசாமியிடம் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை. இந்தியா ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். இந்தியாவில் கட்சி தொடங்க எல்லோருக்கும் உரிமை உள்ளது” என்று கூறினார்.
இதனிடையே, நடிகர் விஜய், என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Cm edapadi k palaniswami comment on vijay enters politics
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center