வீடுகளில் விநாயகர் பூஜை எப்படி நடத்துவது? உகந்த நேரம் என்ன?


By: WebDesk
Updated: August 21, 2020, 05:39:47 PM

Ganesh Chaturthi pooja timing tamil news: இந்தியாவில் முக்கியமான பண்டிகைகளில், விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. முழு முதற் கடவுளாக இந்துக்கள் போற்றும் விநாயகரின் பிறந்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வீதிகளில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபடுவார்கள். பின்னர் 10 நாள் பூஜைக்கு பிறகு, அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக சிலைகளை எடுத்துச் சென்று கரைப்பார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் வழிபாடு நடத்த தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

Ganesh Chaturthi pooja timing tamil news

Ganesh Chaturthi pooja timing: விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம்

ட்ரிக் பஞ்சாங்கத்தின் படி விநாயகர் சதுர்த்தி திதி ஆகஸ்ட் 21-ம் தேதி இரவு 11.02 மணிக்கு தொடங்கி, 22-ம் தேதி இரவு 7.57-க்கு முடிகிறது. விநாயகர் சதுர்த்தி தினமான 22-ம் தேதி மத்தியான பூஜைக்கு உகந்த நேரம் பகல் 11.06 முதல் 1.42 வரை ஆகும். விநாயகரை சிவப்பு வண்ண துணியில் வைத்து வழிபட வேண்டும் என்கிறது ஐதீகம்.

வீட்டின் பூஜை அறையில் சிலையை வைக்க வேண்டும். விநாயகருக்கான பூஜை செய்து, கீர்த்தனைகள் பாடி அடுத்த 10 நாட்கள் விநாயகரை வழிபட வேண்டும். அந்த 10 நாட்களும் தினமும் காலையில் விளக்கேற்றி, பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை அணிவித்து விநாயகரை வழிபடலாம்.

விநாயகருக்கு பூக்கள், பழங்கள், பிரசாதம் ஆகியவற்றை படைக்கலாம். விநாயகரை ‘மோதகப் பிரியன்’ என்று கூறுவார்கள். அதனால் அவருக்கு பிடித்த மோதகத்தை தயாரித்து அவருக்கு பிரசாதமாக வைக்கலாம். கொழுக்கட்டை அல்லது உங்களால் முடிந்த எந்த ஒரு பிரசாதத்தையும் அவருக்கு படைக்கலாம். ஆரத்தி காண்பித்து அவருடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம் .

Ganesh Chaturthi 2020: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழ்த்துப் படங்கள் – நன்மை உண்டாகட்டும்!

விநாயகர் சதுர்த்தியை இந்த ஆண்டு பாதுகாப்பாக இல்லங்களிலேயே கொண்டாடுவது உத்தமம். முறைப்படி திறக்கப்பட்ட கோவில்களுக்கும் சென்று விநாயகர் அருள் பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ganesh chaturthi pooja timing tamil news ganesh chaturthi puja at home





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: