
தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைத்து அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தேர்தலுக்கு துரிதமாக ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த மாதம், திமுகவும் அதிமுகவும் தங்கள் கட்சியில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்து அறிவித்தது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்து அறிவித்துள்ளது. மாநில தலைவர் எல்.முருகன், அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், பாஜக முன்னாள் தேசிய தலைவர் ஹெச்.ராஜா தலைமையில், பாஜக மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, அண்ணாமலை, கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன், மாநில செய்தித் தொடர்பாளர் கார்வேந்தன், மாநில தலைவர் விவசாய அணி ஜி.கே.நாகராஜ், பாஜக சிறுபான்மையினர் அணி மாநில துணை தலைவர் எஸ்.எஸ்.ஷா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, சிறப்பு அழைப்பாளர் நாச்சிமுத்து என 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:L murugan announced to set up bjp elections manifesto team
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center