10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?


By: WebDesk
Aug 10, 2020, 9:23:04 AM

10th exam results live : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை (10.8.20) 9:30 மணியளவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு அறிவித்தது.

Tamil nadu 10th exam results : 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

அதன்படி இன்று காலை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையத்தளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu 10th exam results live : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. மாணவர்கள் வீட்டில் இருந்தப்படியே முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

10th exam results : ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.

மதிப்பெண் சார்ந்த குறைப்பாடுகள் ஏதேனும் இருப்பினும் அதுதொடர்பாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆங்கிலத்தில் தெரிந்துக் கொள்ள

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இது தவிர அனைத்து தலைமை யாசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய முன்னேற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷா ராணி, அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Web Title:Tamil nadu 10th exam results live sslc 10th result tn board 10th result tnresults nic inwww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: