7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு


By: WebDesk
Updated: October 29, 2020, 07:37:02 PM

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும்  அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழு புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு மசோதா ஆளுநருக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு, இதுவரை தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.  ஆளுநரிடம் இருந்து தற்போது வரை ஒப்புதல்  வராததால், அரசியலமைப்பு பிரிவு 162ஐ பயன்படுத்தி நிர்வாக அதிகாரத்தின் படி கொள்கை முடிவெடுத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

மாநில அரசின் நிர்வாக அதிகாரம் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தோடு ஒத்திப்போகும் என்று கூறுகிறது.

 

உதாரணமாக, தமிழக அரசு இலவச மடிக்கணினி, இலவச பள்ளிப் புத்தகம் போன்ற திட்டங்கள் நிர்வாக நிர்வாக அதிகாரத்திற்குள் வருகிறது. இதற்கு, மாநில ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டிய அவசியமில்லை.

இடஒதுக்கீடு அரசின் நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட்டது தான் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அரசானை மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் ஏழு புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை வரலாற்று சிறப்புமிக்க  ஒன்று என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்தது. மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”  மருத்துவபடிப்பில் சேர நீட் தேர்வில் அரசுபபள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் தமிழ்நாடு அரசின் வரலாற்று சிறப்புமிக்க அரசாணை முடிவை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.

சமீபகாலமாக அரசுபள்ளி மாணவர்களுக்கு மருத்துவவடிப்பு கானல் நீராக இருந்துவருகிறது. நீட் தேர்வு வந்தபிறகு அரசுபள்ளியில் படித்த மாணவர்கள் அதிகபட்சம் நான்கு பேர் மேல் இடம் கிடைக்காதது வேதனையளிக்கிறது. மாநில பாடத்திட்டத்தில் தேர்வுவைத்தால் அரசுபள்ளி மாணவர்கள் முதலிடம் பிடிப்பார்கள் என்பதில் மிகையில்லை. நீட் தேர்வோ கூடாது என்பதல்ல. நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்தியபிறகு தேர்வு வைப்பதுதான் சமூக நீதியாகும். அதுவரை அந்தந்த மாநிலங்களே மருத்துவசேர்க்கை நடத்திட அனுமதிக்கவேண்டும்.

தற்போது நீட் தேர்வில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் வருடத்திற்கு சுமார் 300 அரசுபள்ளி மாணவர்கள் மருத்துவபடிப்பில் சேருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக11 மருத்துவ கல்லாரிகள் தொடங்க இருப்பது எதிர்காலத்தில் மருத்துவபடிப்பில் அரசுபள்ளி மாணவர்கள் அதிகம் இடம்பிடிப்பார்கள். அரசுபள்ளியை நோக்கி பெற்றோர்கள் படையெடுப்பார்கள். மாணவர்சேர்க்கை அதிகரிக்கும்.

நீட் தேர்வில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.  மேலும், அரசுபள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படுவது வரவேற்புக்குரியது. அப்பயிற்சி பதினோராம் வகுப்பிலிருந்து தொடங்குவதற்கு ஆவனசெய்தும், அரசுபள்ளி மாணவர்களுக்கு அனைத்து உயர்கல்வி ,தொழில்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் இச்சலுகை நீட்டிக்க ஆவனசெய்யும்படி முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன் ” என்று தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tn govt issues go providing 7 5 reservation for govt school students under executive power

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: