four பொருள்… 2 நிமிடம்…. ஈஸியான கீட்டோ சீஸ் கேக் ரெடி!


By: WebDesk
Published: August 29, 2020, 9:01:49 AM

Easy Keto Cheese Cake: சீஸ்கேக் சற்று காஸ்ட்லியாகவும், டயட்டை பாதிக்கக் கூடிய வகையிலும் இருக்கலாம். இந்த இரண்டுக்கும் இடையே ஒரு தீர்க்கமான முடிவெடுப்பதில் நீங்கள் குழம்பி போயிருக்கலாம். ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக ஒரு அற்புத தீர்வு எங்களிடம் உள்ளது!

யூ-ட்யூபர் கீட்டோ மில்லினியலின் இந்த எளிதான செய்முறையைப் பாருங்கள், இதற்கு வெறும் 4 பொருட்களும் சரியாக 2 நிமிடங்களும் போதும்!

தேவையான பொருட்கள்

1 – மீடியம் முட்டை

அரை தேக்கரண்டி – வெண்ணிலா எசென்ஸ் (சர்க்கரை இல்லாதது)

3 டீஸ்பூன் – கிரீம் சீஸ்

1 டீஸ்பூன் – சர்க்கரை இல்லாத இனிப்பு

செய்முறை

* கோப்பையில் 3 டீஸ்பூன் கொழுப்பு இல்லாத கிரீம் சீஸை மென்மையாக அடிக்கவும்.

* அடுத்து, ஒரு நடுத்தர அளவிலான முழு முட்டையையும் சேர்த்து, அது மென்மையான பேஸ்டாக மாறும் வரை அடிக்கவும். இப்போது 1 தேக்கரண்டி சர்க்கரை இல்லாத வெண்ணிலா எசென்ஸ் மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை இல்லாத இனிப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

* இப்போது அதை மைக்ரோவேவ் சேஃப் கப்பிற்கு மாற்றி 90 விநாடிகள் பேக்  செய்யுங்கள். பின்னர் அதை குளிர்விக்கவும். ஆறியதும் கத்தியைப் பயன்படுத்தி ஓரங்களை கீறி விடவும். இதனால் கோப்பையிலிருந்து கேக் எளிதாக வெளியே வரும்.

* அதை ஒரு தட்டுக்கு மாற்றி, சில சாக்லேட் கனாச்சே தூறல் அல்லது உங்களுக்கு விருப்பமான ஃப்ரெஷ்ஷாக நறுக்கிய பழங்களுடன் அதை சாப்பிட்டு மகிழவும்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Easy keto cheesecake video cheesecake recipe





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: