Nayagi Serial Actress Divya Pradeep Got Differnt Marriage Proposal


nayagi

சின்னத்திரையில் நாயகி சீரியலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் நடிகை வித்யா பிரதீப். இவர் இந்திய மாடல் அழகியும் ஆவார். இவர் திரைத்துறை மட்டுமின்றி ஒரு தனியார் கண் மருத்துவமனையில் ஜூனியர் சயின்டிஸ்ட் ஆகவும் இயங்கி வருகிறார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவை சேர்ந்தவர். தமிழில் 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சைவம்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு வந்தார். இதனை தொடர்ந்து பசங்க, ஒன்னுமே புரியல, அதிபர், அச்சமின்றி, களரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2 உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை வித்யா சின்னத்திரையில் தூள் கிளப்பி வருகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘நாயகி’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் இந்த நாயகி சீரியல் மூலம் தான் மக்களிடையே அதிக அளவில் பிரபலமானர். இந்த சீரியல் தொடங்கியதிலிருந்தே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி விட்டது. நாயகி சீரியல் மூலம் தமிழ் குடும்பங்களின் ஃபேவரிட் நாயகி ஆனார். இவருடைய அழகான முகமும், தமிழ் உச்சரிப்பும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து இவருக்கு பல லவ் ப்ரொபோஸ் வந்து கொண்டே இருக்கின்றது. சமூக வலைத்தளங்களில் மட்டுமில்லாமல் நேரிலும் இவரை பல பேர் லவ் ப்ரொபோஸ் செய்து வருகிறார்கள். அதில் ஒருவர் வித்தியாசமான முறையில் இவருக்கு லவ் ப்ரோபோசல் செய்து இவரை அதிர்ச்சியடைய செய்து உள்ளார்.

இதையும் பாருங்க : இதற்காகத்தான் பர்ஸ்ட் லுக்கில் blur இமேஜ் கொடுத்தோம். போஸ்டர் வடிவமைப்பாளர் சொன்ன செம காரணம்.

-விளம்பரம்-

இது குறித்து வித்யாவிடம் கேட்ட போது அவர் கூறியது, இந்த வருடம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அது புரோபஷனல் ஆகவும், பர்சனலாகவும். அந்த அளவுக்கான நிறைய விஷயங்கள் நடந்து கொண்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் ஆனந்தி எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரிக்கும் போது என்னை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. தடம் படமும் 2019 வருடம் தான் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தேன். இந்த படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வந்து உள்ளது. தற்போது நான் ஐந்து படங்களில் கமிட்டாகி இருக்கிறேன். அதுவும் இரண்டு படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறேன். எதிர்பார்க்காத அளவிற்கு நிறைய வருஷங்கள் இந்த வருடம் நடந்து வருகிறது.

Related image

இவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சில கஷ்டமான விஷயம் நடந்திருக்கு. நம்ம வாழ்க்கையில் எப்போதுமே நடக்கிற விஷயங்களுக்கு நாம் எப்படி ரியாக்ட் பண்ணுவோமோ அதை பொருத்து தான் சோகமும், சந்தோசமும் உண்டாகும். ஆனால், நான் எதுக்குமே பெருசா ரியாக்ட் பண்ண மாட்டேன். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 2019 ஆம் ஆண்டு எனக்கு நிறைய லவ் ப்ரோபோசல் வந்து குவிந்தது. நாயகி பேன்ஸ் பல பேர் என் மீது நிறைய அன்பு வைத்து உள்ளார்கள். அதன் விளைவு இணையத்தில் ஐ லவ் யூ, ஐ லவ் யூ என்று சொல்கிறார்கள். பலர் சீரியஸாகவே ஐ லவ் யூ சொன்னார்கள்.

அதில் ஒருத்தர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக அவருடைய மொத்த சொத்து விவரம், குடும்பத்தின் விவரங்கள் எல்லாம் எனக்கு அனுப்பி வைத்து என்னை கல்யாணம் பண்ணிக்கங்க என்று கேட்டார். உங்களுக்கு உண்மையாக நான் இருப்பேன், உங்களை நான் தீவிரமாக லவ் பண்ணறேன், கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சொன்னார். இது பார்த்து நான் ரொம்ப ஷாக் ஆயிட்டேன். அது மட்டுமில்லாமல் ஒரு சில பேர் பெரிய கடிதங்கள் எழுதி உங்களை நல்லா பாத்துப்பேன் இன்ஸ்டால் மெசேஜ் எல்லாம் அனுப்புவாங்க. இந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கையோடும், கம்பீரமாகவும் இருங்கள் என்று புன்னகையுடன் கூறினார் நாயகி ஆனந்தி.www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: