Rasi Palan 12th August 2020: இன்றைய ராசிபலன்


Today Rasi Palan, 12th August 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 12th August 2020: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 12, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப் புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். சாதிக்கும் நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

பிஸியாக இருப்பது போன்றே தோற்றமளிப்பீர்கள். ஆனால், உங்களே நீங்கள் ஏமாற்றிக் கொள்வது உண்மை தானே! தெளிவான முடிவுகளை எடுப்பதில் மெகா சொதப்பல் செய்யும் நீங்கள், தவறுகளை திருத்திக் கொள்ள முன்வருவதில்லை.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

அனைத்திலும் வளத்துடன் காணப்படும் நீங்கள், உடல் நலத்தில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சனி பகவானை வேண்டிக் கொண்டு பணிகளை துவக்குங்கள். தலையாய கடமையை முடிக்க ஆர்வம் காட்டுங்கள். மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

தனிமையை விரும்பும் விருச்சிக ராசிகாரர்களே, இது மிகவும் முக்கியமான காலக்கட்டம். அனுகூலமான விஷயங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் வருமே தவிர, மகிழ்ச்சியை குத்தகைக்கு எடுத்து வைத்துக் கொள்ள நினைத்தால் வேலைக்கு ஆகாது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்களது சில சுயநல சிந்தனைகளால் தேவையில்லாத பேச்சுக்களை கேட்க வேண்டியிருக்கும். தவறான பழக்கவழக்கம் உங்களுக்கு வீழ்ச்சியாக அமையலாம். கிரக மாற்றங்களின் தன்மைக்கு ஏற்ப உங்கள் வெற்றி தீர்மானிக்கப்படும். மிகவும் சுமாரான நாள் இன்று.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

எண்ணங்கள் உங்கள் வாழ்வை மேம்படுத்தும். நிதானமாக செயல்படுவது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். கல்வியால் உங்கள் தரம் உயரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும். அது நல்ல மாற்றமாக இருக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சமூகம் என்ன நினைக்கும் என்று கவலைப்பட்டு முடங்கிக் கிடக்க வேண்டாம். சிறிய சிறிய சறுக்கல்கள் உங்களுக்கு பாடமே தவிர, தோல்வி கிடையாது. எழுந்து ஓடுங்கள். தனியாத் தாகத்தை ஒரு சில முயற்சிகளில் தணித்துக் கொள்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

குடும்பத்தினரிடம் உங்களுக்கு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அடுத்து வரும் நாட்கள் உங்கள் முன்னேற்றத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இருப்பினும், பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Horoscope at NavaIndia Tamil. You can also catch all the latest update on Tamil Rashifal by following us on Twitter and Facebook





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: