Rasi Palan 29th August 2020: இன்றைய ராசிபலன்


Today Rasi Palan, 29th August 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 29th August 2020: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 29, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

அரசு பணியில் இருப்போருக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. இன்று பல சஸ்பென்ஸ்கள் உங்களை மகிழ்விக்கும். வாகனங்கள் வாங்கும் யோகம் உள்ளது. புரிதலில் சற்று சிரமப்படுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

முருகனின் வழிபாட்டுடன் இன்றைய தினத்தை தொடங்குங்கள். வருகின்ற ஆபத்து நீங்கும். தேர்வுகளுக்கு படிக்கும் போது மிகுந்த கவனம் தேவை. மாணவர்களை பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பங்களுடன் அதிகம் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிட்டும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பெற்றவர்களின் மீது வைத்திருக்கும் அன்பை அவர்களிடமே வெளிக்காட்டாமலே இருப்பது தான் உங்கள் பிரச்சனை. வாயைத் திறந்து பேசுங்கள். மௌனம் எல்லா நேரத்திலும் உங்களுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தராது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

வெற்றிகரமான நாள் இது. பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். காதல், திருமணம் தித்திப்பாக இருக்கும். பல நாட்கள் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்குகள் முடிவு பெறும். நல்ல வேலை வாய்ப்புகள் கிட்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உடல் ஆரோக்யத்தில் அக்கறை தேவை. குளிர்ந்த பண்டங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். கிரகங்கள் சாதகமாக இல்லாத காரணத்தால், மருத்துவர்களிடம் போக வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கை தேவை.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

சில சங்கடங்களுக்காக முடங்கினால் எந்த வெற்றியையும் வசப்படுத்துவது என்ன, வாசம் பிடிக்க கூட முடியாது. உங்கள் பிரச்சனயே, இலக்குகள் இல்லாமல் பயணிப்பது தான். விநாயகரை தொடர்ந்து வழிபாட்டு வாருங்கள். தடைகள் அகன்று ஓடும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

போதும் என்ற உள்ளம் வேண்டும். அதை நீங்கள் ஃபாலோ செய்வது நல்லது. உணவில் கட்டுப்பாடு தேவை. மதம் சார்ந்த நம்பிக்கையில் நாட்டம் அதிகமாகும். மற்றவர்களை ஏளனமாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சிறப்பான நாள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் பிரதிபலன் உண்டு. அதனை அனுபவிக்கும் பாக்கியம் இன்று உங்களுக்கு உள்ளது. நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். பொழுதுபோக்கில் நாட்டம் செலுத்துவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

தேவைக்கு அதிகமான நம்பிக்கை உங்களிடம் வந்துவிட்டது. களத்தில் இறங்க வேண்டியது மட்டுமே இனி பாக்கி. துரிதமான முடிவுகள் இனி கைக்கொடுக்கும். உங்கள் குல தெய்வ வழிபாடு செய்யப்படாமல் இருந்தால், முதலில் அதை நிறைவேற்றுங்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

அரசு பணி கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உங்கள் கௌரவம் உயரும். யாருக்காகவும் உங்கள் உரிமைகளை வீட்டுக் கொடுக்க மாட்டீர்கள். தேடி வந்து உதவி செய்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். கணவன்-மனைவி உறவில் உரசல் உண்டாக வாய்ப்புள்ளது. காதலில் பிரிவுகள் உண்டாகலாம். பணியிடத்தில் நீங்கள் விரும்பாவிட்டாலும் வெற்றி வந்தே தீரும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Horoscope at NavaIndia Tamil. You can also catch all the latest update on Tamil Rashifal by following us on Twitter and Facebook





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: