Rasi Palan 2nd November 2020: இன்றைய ராசிபலன்


Rasi Palan 2nd November 2020: இன்றைய ராசிபலன்: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 2nd November 2020: இன்றைய ராசி பலன், நவம்பர்  2, 2020:

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

ஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :  சந்திரனின் பார்வை உங்கள் மீது விழுவதால் அதிக நன்மைகள் பிறக்கும். உங்களின் தேவைகளை நிறைவேற்ற மற்றவர்களை நம்பாதீர்கள். அதே போன்று, மற்றவர்களுக்காக உங்களின் தனித்தன்மையை இழந்து விடாதீர்கள். எதிலும், அதிக மனநிறைவு கொள்வதை  தவிர்க்க வேண்டும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21):  செலவவீனங்கள் அதிகரிக்கும். மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதுவரை, நீங்கள் கட்டுக்கோப்பாக இருந்தாலும், வரும் காலங்களில் செலவீனங்கள் அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். எனவே, அர்த்தமுடன் செலவு செய்யுங்கள், செலவுகளுக்கு புதிய அர்த்தத்தை தேடிக் கொள்ளுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21): உங்களின் நீண்ட நாள் யோசனைகளை நடைமுறைப்படுத்த தயாராகி கொள்ளுங்கள். ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்தின் வசனம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக அமைகிறது.  சில விசயங்களை தற்போது நீங்கள் முன்னெடுக்கவில்லை என்றால் பிற்காலத்தில் நீங்கள் விரக்தியடைய  வாய்ப்புண்டு.

கடகம் (ஜூன் 22  – ஜூலை  23) : பொதுவாக, மற்றவைகளை  விட கடக ராசி மிகச் சிறந்த பலன்களை அடையும் என நான்  அடிக்கடி நினைப்பதந்து. இருப்பினும்,  உங்கள் வாழ்க்கை பெரும்பாலும் போராட்டங்கள் நிறைந்ததாகக்  காணப்படுகிறது விரைவில், சங்கடங்கள் நீங்கி, அமைதி கொள்வீர்கள் என்பதை கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. வரும் நாட்களில், நிதானத்துடன் நடந்துக் கொள்ளுங்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : பொருளாதாரா ரீதியாக மிகவும் சாதகமான நாள். ஒரு குறிப்பிட்ட துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற தங்களின் நீண்ட நாள் ஆசைகளை செயல்படுத்த முன்வரலாம். தெளிவான திட்டமிடல், ஆழமான பார்வை உங்களை வழிநடத்தும்.

கன்னி (ஆகஸ்ட் 24  – செப்டம்பர் 23) : வெள்ளி, புதன் கோள்களின் தொடர்பு  நெருக்கமாக இருப்பதால், மற்றவர்களின் நேசத்தையும், ஆழமான அரவணைப்பையும் உணருவீர்கள். இருப்பினும், ஒரு நல்ல நட்பு உங்களை விட்டு விழகாமல் இருக்க, உங்கள் தரப்பில் இருந்து சில முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் .

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இதுவே சிறந்த நேரம். அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில்  இருக்கும். உண்மையில், வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்,  கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்!  என்னை, மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்!
என்னை, மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்!  என்ற பாடல் வரிகள் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமையும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22): மிகவும் சுவார்ஸ்யமான சந்திப்புகள் நிகழும். நீண்ட நாள் உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும். மிகப் பெரிய செயல்பாடுகளுக்கு தேவையான பணிகளை தற்போது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக செய்து கொண்டு வருகீறிர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 20):   தித்திப்பான நாள். பல நாள் கனவு இன்று நிஜமாக வாய்ப்புள்ளது. ஒன்சைட் காதல், இப்போது டபுள் சைடாக மாற அதிகம் வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் மதிப்பை பெறுவீர்கள். உத்யோகம் சிறக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : விவாதங்களும், பிரச்சனைகளும் உங்களை சுற்றி சுற்றி வரும். அதனை தவிர்க்க வேண்டியது அவசியம். சுயக்கட்டுப்பாடு என்பது உங்களுக்கு தேவை. முக்கியமாக, இன்றைய தினம் அமைதியை விடாமல் கடைபிடிக்க வேண்டும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :  பணவரவு சிறப்பாக இருக்கும். முடிந்த அளவு கடனை அடைப்பீர்கள். இதனால், மனதளவில் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். சொந்தங்களின் ஆதரவு இனிமேல் கிடைக்கும். ஆனால், பொறுப்பை மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : தானம் வழங்குங்கள். உங்களின் ஆரோக்யமும், நிதி நிலைமையும் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள். கைகளால் செய்யப்பட வேண்டிய வேலைகளை, கைகளால் தான் செய்ய வேண்டும். காலால் செய்யலாம் என நினைக்கக் கூடாது. திருப்தியான நாள் இது.

Get all the Latest Tamil News and Tamil Horoscope at NavaIndia Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: