Rasi Palan fifth November 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan fifth November 2020: இன்றைய ராசிபலன்


Rasi Palan 5th November 2020: இன்றைய ராசிபலன்: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 5th November 2020: இன்றைய ராசி பலன், நவம்பர் 2, 2020:

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

ஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : அன்புக் கொள்ள உறவுவுண்டு, சொந்தங்களுக்கு  உரிமை உண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.  விவாதம் என்ற பெயரில் பிறரைக் காயப்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.  மாற்றங்களை காண்பீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :  தொட்ட காரியங்கள் துலங்கும். தெளிவற்ற மனநிலையில் இருப்பதை எண்ணி  கவலை கொள்ள வேண்டாம். தெளிவற்ற மனநிலை பல தெளிவான உண்மைகளை எடுத்துரைக்கும். சில தடுமாற்றங்கள் ஏற்படும். இருப்பினும் சமாளித்து விடுவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : நீங்கள் எதிர்பார்த்த தருணம் கிடைப்பதில் சில காலதாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் சுபம் உண்டாகும். உங்கள் திட்டங்கள் செயல் வடிவமாக மாறும் தினம் இது. கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்ததால், பக்குவத்துடன் செயல்பாடுகளை அணுகுவீர்கள். தோல்விகளையும் கடந்து செல்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : தவறுகள் அற்ற, தவறுகள் செய்யமுடியாத மனிதன் என்று யாருமில்லை.    தவறுகளில் இருந்து பாடம் கற்பீர்கள். முன்னேற்றமான நாட்களை இனி சந்திப்பீர்கள். தோல்விகள் உங்களை மேலும் வலிமையான நபராக மாற்றும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :  சொந்த பிரச்சனை, சோக பிரச்சனை , அடுத்தவன் பிரச்னை , ஊர் பிரச்சனை என எந்தப் பிரச்னையும் உங்களை விடுவதாய் இல்லை. ஆனால், எதிலும் மனம் தளர மாட்டீர்கள்.  சுனாமியிலேயே “ஸ்விம்மிங்” போட்டவன்டா நா !!! என்ற அந்த வழக்கமான வசனம் உங்களுக்கு கைகொடுக்கும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : வாழ்கையில் நிலவிய தடுமாற்றமும் தயக்கமும் வெகுவாக குறையும். பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்க யோசனை வேண்டாம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : விலாவாரியாக எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருக்காமல், உங்கள் பணியை மட்டும் கவனியுங்கள். நீங்கள் இலட்சியமாக கொண்ட அந்த அரசுப் பணிக்கு தயாராக தொடங்குங்கள். வெற்றி வந்து சேரும் .

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :  மனதில் உறுதி வேண்டும்! வார்த்தையிலே தெளிவும் வேண்டும்  என்ற வரிகள் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். பதட்டப்படமால்  பிரச்சனைகளை கையாள கற்றுக் கொள்ளுங்கள். மன இறுக்கத்தை தளர்த்திக்கொள்ளுங்கள்

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : .தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்ள அதிகம் வாய்ப்புள்ளது.  எனவே, பொய் சொல்வதை தவிர்க்கவும். நேர்மையான வாழ்க்கைமுறையை ஊக்குவியுங்கள். பொய் செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பாமல் இருப்பது மிகவும் நல்லது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :  வெற்றிகரமான நாள். வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பொருளாதார மந்தநிலை சீரடையும். கணவன்- மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பங்களில் மகிழ்ச்சி காணப்படும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :  மன அழுத்தம் குறையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மருத்துவம் தொடர்பான செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு. குழந்தைகள் பரமாரிப்பில் கவனம் தேவை. மகிழ்ச்சியும், சிக்கலும் கலந்த நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : வெளிநாடுகளுக்குப் பயணம் செல்ல வாய்ப்புகள் உருவாகும். காதல் கைகூடும். வெற்றி எனும் தேவதை வெற்றி எனும் தேவதை வீடு தேடி வரும்.

Get all the Latest Tamil News and Tamil Horoscope at NavaIndia Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter

and Facebook





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: